sofi's samayal

Tuesday, April 6, 2010

கம்பு இட்லி
தேவையான பொருட்கள் :

  • கம்பு - இரண்டு கப்
  • புழுங்கல் அரிசி - ஒரு கப்
  • துவரம் பருப்பு - ஒரு கப்
செய்முறை :

கம்பை நன்றாக கழுவி கொண்டு அதை ஊற போடவும் . அரிசியையும் துவரம் பருப்பையும் கழுவி விட்டு , இவை இரண்டையும் ஒன்றாக ஊற போடவும் .
நான்கு மணி நேரம் ஊற விடவும் . முதலில் கம்பை தனியாக அரைத்து கொள்ளவும் , பிறகு அரிசியையும் துவரம் பருப்பையும் சேர்த்து அரைக்கவும் .
அரைத்து வைத்துள்ள கம்பையும் அரிசி மற்றும் பருப்பை ஒன்றாக கலக்கவும் .
இரவு முழுவதும் புளிக்க விட வேண்டும் . இட்லி மாவு கரைப்பது போல் சிறிது இட்லி சோடா மாவு மற்றும் நல்லெண்ணெய் ஒரு கரண்டி சேர்த்து கரைக்கவும் . குக்கேரில் காய் வேக வைக்கும் தட்டில் சிறிது எண்ணெய் தடவி இந்த மாவை அதில் ஊற்றி வேக வைக்கவும் .

சுவையான ஆரோகியமான கம்பு இட்லி தயார்.

இந்த இட்லிக்கு நல்ல சைடு டிஷ் கார சட்னி .

kambu idly